முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் குறித்த விவரத்தை மாவட்டக் கல்வி அலுவலர் அ.விஷ்ணுதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:20 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் குறித்த விவரத்தை மாவட்டக் கல்வி அலுவலர் அ.விஷ்ணுதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

இதன்படி மாவட்ட அளவில் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று கே.பிரியதர்ஷினி, ராஜபாளையம் ரமணா வித்யாலயா முதலிடம் பெற்றுள்ளார்.

500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் விவரம்: என்.அச்சுதா தேவி, ராஜபாளையம் சின்மயா வித்யாலயா. எஸ்.கந்த காமாட்சி மற்றும் எம்.சுவேதா ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அம்மணியம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி. ஜி.மணிகண்டன், ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப் பள்ளி. ஜி.அபிதா ரத்தினம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி.

500-க்கு496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 8 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் விவரம்: பி.அட்லின், ஸ்ரீவில்லிபு்ததூர் எம்.என்.ஆர்.டி. மகளிர் மேல்நிலைப் பள்ளி. எம்.சத்திய பிரகாஷ், எம்.முத்து ஆனந்தவள்ளி, எஸ்.காளிஸ் மதுமிதா, ஆர்.ஸ்ரீஜனனி ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா மேல்நிலைப் பள்ளி.

ஆர்.இ.அஷ்மிதா, ராஜபாளையம் ரோட்டரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. எஸ்.ஷாலினி, ராஜபாளையம் ஹரிஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

முழு கட்டுரையைப் படிக்க →