முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை இளைஞர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

தேனியில் மதுரையைச் சேர்ந்த ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றாவாளி உள்ளிட்ட மேலும் 4 பேரை புதன்கிழமை இரவு

Updated On : 29 மே, 2014 at 6:38 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:57 AM

தேனியில் மதுரையைச் சேர்ந்த ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றாவாளி உள்ளிட்ட மேலும் 4 பேரை புதன்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

     தேனி அல்லிநகரம், பெரியகுளம் சாலையில் மதுரை மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த பிரபு(26) என்பவரை மதுரையைச் சேர்ந்த கூலிப் படை கும்பல் சராமரியாக வெட்டிக் கொலை செய்தனர். பிரபுவை கொலை செய்த கும்பலைச் சேர்ந்த சோழவந்தானைச் சேர்ந்த கனகராஜ்(30), மதுரை கே.புதூரைச் சேர்ந்த ரமேஷ்குமார்(32) ஆகியோரை தேனி-போடி விலக்கு பகுதியில் வாகனத் தணிக்கையில் இருந்த போலீஸார் சம்பம் நடந்த சில நிமிடங்களில் கைது செய்தனர். இந்தக் கொலையில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த சூரியபிரகாஷ் திங்கள்கிழமை இரவு தேனியில் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், பிரபு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மதுரையைச் சேர்ந்த ஈ.ராஜா என்ற சின்னராஜா(32), செம்பட்டிபுரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(26), கருப்பாயூரணியைச் சேர்ந்த அசோக்குமார்(32), செல்லூரைச் சேர்ந்த பாண்டி(29) ஆகியரை புதன்கிழமை இரவு அல்லிநகரம் காவல் நிலைய போலீபோலீஸார் கைது செய்தனர்.

Advertisement

      தேனி-பெரிகுளம் புறவழிச் சாலையில் பிரபுவின் கொலையில் தொடர்புடைய பாண்டி என்பவர் போலீஸாரிடம் சிக்கியதாகவும், அவர் அளித்த தகவலில், தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை, வனத் துறை நர்சரி அருகே பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான சின்னராஜா, ராமகிருஷ்ணன், அசோக்குமார் ஆகியோரை கைது செய்யப்பட்டதாகவும் போலீஸார் கூறினர்.

       பழிக்குப் பழி சம்பவம்: மதுரையில் கூலிப் படை கும்பலைச் சேர்ந்தவர்களான பிரபு, சின்னராஜா ஆகியோரிடையை ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பழி தீர்க்கும் நோக்கத்தில் இந்தக் கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபுவின் கும்பலைச் சேர்ந்த லோகு என்பவரை சின்னராஜாவின் கும்பல் கொலை செய்ததாகவும், இதற்கு பதிலடியாக சின்னராஜாவின் உறவினரான ரவிசங்கர் என்பவரை பிரபு வின் கும்பல் கொலை செய்ததாகவும் தெரிகிறது.

      பிரபுவை கொலை செய்ய சின்னராஜா கும்பல் திட்டமிட்டதில், ஆள் மாறாட்டமாக மாரிமுத்து என்பவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேனியில் ஆண்டிபட்டி தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத் தலைவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தி கைதான பிரபு, நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் தேனியில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். அப்போது, பழிக்கு பழி சம்பவமாக சின்னராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் பிரபுவை வெடிக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறினார்.

    கொலைக்கு பயன்படுத்திய கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீஸார், கைது செய்யப்பட்ட சின்னராஜா, ராமகிருஷ்ணன், அசோக்குமார், பாண்டி மற்றும் சூரியபிரகாஷ் ஆகியோரை தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.