முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.குமாரசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கூட்டமைப்புத் தலைவர் எஸ்.முத்துகுமாரசாமி, பள்ளி ஆசிரியர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:28 AM
பகிர்:

திருநெல்வேலியில் கருவூலக அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.குமாரசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கூட்டமைப்புத் தலைவர் எஸ்.முத்துகுமாரசாமி, பள்ளி ஆசிரியர் ஓய்வூதியர் சங்க நிர்வாகி ஏ.ஆதிமூலம், அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலர் என்.குமரவேலு ஆகியோர் பேசினர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு ஆணை 363-ல் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு ஊட்டச்சத்து கிராம உதவியாளர் ஊராட்சி உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3050 வழங்க வேண்டும். முதியோருக்கு அரசு அறிவித்தபடி பேருந்து பயண சலுகை அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.வைகுண்டமணி நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →