முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்காலில் ரயில் என்ஜின் மோதி பொறியாளர் சாவு: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

காரைக்கால் ரயில் நிலையத்தில் என்ஜின் மோதி ரயில்வே பொறியாளர் உயிரிழந்தார். உடலை அப்புறப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், 2 மணி நேரத்துக்கும் மேலாக ரயில்வே போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:18 AM
பகிர்:

காரைக்கால் ரயில் நிலையத்தில் என்ஜின் மோதி ரயில்வே பொறியாளர் உயிரிழந்தார். உடலை அப்புறப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், 2 மணி நேரத்துக்கும் மேலாக ரயில்வே போக்குவரத்து ஸ்தம்பித்தது.

காரைக்கால் ரயில் நிலையத்தின் அருகே டிராலியின் ரயில்வே பொறியாளர் ராஜ்மோகன் (52) தலைமையில் ஊழியர்கள் தண்டவாளத்தில் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சோதனை செய்துகொண்டிருந்தனர். என்ஜின் வேறு தண்டவாளத்துக்கு மாறும் வகையில் இயக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

ரயில் நிலையத்தின் 200 மீட்டர் தூரத்தில் பரிசோதனை செய்துகொண்டிருந்த டிராலி அருகே என்ஜின் பின்புறம் வந்துகொண்டிருந்தது. இதையறிந்த டிராலியின் ஊழியர்கள் பொறியாளர் ராஜ்மோகனிடம் குதித்துவிடுங்கள் என கூறிவிட்டு விலகிக்கொண்டனராம். ஆனால் பொறியாளர் குதிக்காமல் இருந்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்புறம் வந்த என்ஜின், டிராலி மீது பலமாக மோதியது. இதில் டிராலி தூக்கியெறியப்பட்டது. அதில் இருந்த பொறியாளர் ராஜ்மோகன் கீழே விழுந்ததில் தலை மீது என்ஜின் ஏறியது இதில் தலை, கால் உள்ளிட்டவை நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தார்.

சடலம் தண்டவாளத்திலேயே கிடந்தது. காரைக்கால் ரயில் நிலைய அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து திருச்சி ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.

காரைக்காலில் ரயில் நிலையத்திற்கென ரயில்வே போலீஸ் நியமிக்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலையிலேயே இயங்கிவருகிறது. காரைக்காலில் உள்ள மாநில போலீஸாரும், இந்த விபத்து குறித்து நேரில் விசாரிக்க செல்லவில்லை. இது எங்களுடைய பொறுப்பு அல்ல என தெரிவித்துவிட்டனர். திருவாரூர் முதல் நாகூர் வரையிலான ரயில் நிலையம் பகுதிக்குள் மட்டுமே ரயில்வே போலீஸார் செல்லமுடியுமெனக் கூறி திருவாரூர் பகுதி ரயில்வே போலீஸாரும் காரைக்காலுக்கு 12.30 மணி வரை வரவில்லை.

சடலம் 2 மணி நேரத்துக்கும் மேலாக  தண்டவாளத்திலேயே  கிடந்தது. இதனால் 12.30 மணியளவில் காரைக்காலில் இருந்து திருச்சிக்கு செல்லக்கூடிய பயணிகள் ரயில் புறப்படமுடியவில்லை. ரயில் நிலையம்  அருகே உள்ள கேட் மூடப்பட்டதும் திறக்கப்படவில்லை. இதனால் தோமாஸ்  அருள் வீதியில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முற்றிலும் திருச்சி ரயில்வே நிர்வாகம் காரைக்கால் ரயில்வே குறித்து அக்கறை இல்லாமல் செயல்படுவதாலேயே இந்த நிலையென பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →