முகப்பு
தற்போதைய செய்திகள்

காவிரி தடுப்பணை விவகாரம்: சித்தராமையாவை சந்தித்து முறையிடுவோம் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின்

Updated On : 13 நவம்பர், 2014 at 6:34 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:52 PM

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசியதாவது:

காஞ்சிபுரம் வடக்கு மாவடட  தலைவர் நெடுஞ்செழியன், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன், ஆகியோர் கட்சி விரோத நடவடிகையில் ஈடுபட்டு வருவதால் அவர்கள், உறுப்பினர், உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள் என்றார். வாசனுடன் சென்ற மற்ற நிர்வாகிகளை பற்றி கேட்ட போது அவர்கள் திரும்ப வருவதற்கு வாய்ப்புள்ளது எனவே எந்த நடவடிக்கையும் இல்லை என்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நீக்கப்பட்ட  இரண்டு பேர் மீதும் குற்ற வழக்குகள் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

. மேலும் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேலும் 2 அணைகள் கட்டப்போவதாக தெரிவித்துள்ளது. அவ்வாறு காவிரியில் அணை கட்டப்பட்டால்,  தமிழக விவசாயம் கடுமையாக பாதிக்கும். எனவே அம்மாநில முதல்வர் சித்தராமையாவை சந்தித்து அணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு முறையிடுவோம் என்றார். மேலும் அவர்கள்  தடுப்பணை கட்டமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, எனினும் மீறி தடுப்பனை கட்டும் நடவடிக்கை தொடர்ந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டம் நடத்தும் என்றார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.