முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் மதுப்பாட்டில்கள் விற்றதாக 4 பேர் கைது

Updated On : 26 நவம்பர், 2014 at 10:52 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:00 PM

விருதுநகரில் முறைகேடாக மதுப்பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் பகுதியில் காலை நேரங்களில் அதிக விலைக்கு மதுப்பாட்டில்களை விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனுக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் சோதனை நடத்த காவல் துணைக்கண்காணிப்பாளர் சக்கரவர்த்திக்கு உத்தரவிட்டார். உடனே மேற்கு காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் புதன்கிழமை காலையில் ரோந்து சென்ற போது முறைகேடாக மதுப்பாட்டில்களை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே அவர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில், புல்லலக்கோட்டை சாலையில் தங்க்ச்சாமி(48), வடமலைக்குறிச்சி சாலையில் சுப்பிரமணி(65), கச்சேரி சாலையில் லட்சுமணன்(35), பழைய பேருந்து நிலையம் அருகே மனோகரன்(54) ஆகியோரை கையும் களவுமாக பிடித்து அவர்களிடம் இருந்து 80 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அதோடு, இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.