முகப்பு
தற்போதைய செய்திகள்

விலையில்லா ஆடுகள், கறவை மாடுகளுக்கான மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் விலையில்லா கறவை மாடுகள்,  ஆடுகளுக்கான இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்க முகாம் வருகிற 28,29 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது.

Updated On : 26 நவம்பர், 2014 at 10:55 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:00 PM

விருதுநகர் மாவட்டத்தில் விலையில்லா கறவை மாடுகள்,  ஆடுகளுக்கான இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்க முகாம் வருகிற 28,29 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரின் சிறப்பு திட்டத்தின் சார்பில் கிராமங்களில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் பயனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பாக கால்நடைகளை பராமரித்தவர்களை கால்நடை துறை அலுவலர்களால் தேர்வு செய்து தமிழ் புத்தாண்டு நாளில் பரிசும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்கவும், ஆடுகளின் எடையினை அதிகரிக்கவும் மேற்குறிப்பிட்ட நாள்களில் இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை, குடற்புழு நீக்கம் முகாம் நடைபெற இருக்கிறது.

Advertisement

எனவே பயனாளிகள் மற்றும் விவசாயிகள் ஆகிய அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.