முகப்பு
தற்போதைய செய்திகள்

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: தலைமை பொறியாளரின் ஜாமீன் மனு ஏப்ரல் 8ம் தேதி விசாரணை

சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, வேளாண்மை துறை தலைமை பொறியாளர் மு.செந்தில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக்கோரி

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:06 AM
பகிர்:

சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, வேளாண்மை துறை தலைமை பொறியாளர் மு.செந்தில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக்கோரி திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அவரது மனு மீதான விசாரணை இம் மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருநெல்வேலியில் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசுவாமி (57) ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்தது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்மூர்த்தி, வேளாண்மை துறையின் தலைமை பொறியாளர் மு.செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மு.செந்தில் சார்பில் ஜாமீன் கேட்டு, திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வேளாண்மை துறையின் மிகவும் மதிப்பு மிக்க பொறுப்பில், நேர்மையுடன் பணியாற்றி வரும் எனக்கும், இந்த வழக்குக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எனக்கு ஆஸ்துமா, ரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளன. இவற்றை பரிசீலித்து எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இம் மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →