பாளையங்கோட்டை அருகே ஊராட்சி துணைத் தலைவர் வெட்டிக்கொலை
பாளையங்கோட்டை அருகே ஊராட்சி துணைத் தலைவர் திங்கள்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை அருகே ஊராட்சி துணைத் தலைவர் திங்கள்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தைச் சேர்ந்த கணபதி மகன் பாலமுருகன் (35). ஊராட்சித் துணைத்தலைவராக இருந்து வந்தார். இவர், திங்கள்கிழமை பிற்பகலில் தனது பைக்கில் பொருள்கள் வாங்க பாளையங்கோட்டைக்கு வந்தாராம். பின்னர் வீட்டுக்குத் திரும்பி சென்று கொண்டிருந்தபோது சிவலப்பேரி சாலையில் சக்திநகர் பகுதியில் பைக்கில் வந்த மர்மகும்பல் பாலமுருகனை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் இறந்தார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.