விராலிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது
விராலிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் விவாசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விராலிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் விவாசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விராலிமலையில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் மாலை 7 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் இருட்ட தொடங்கியதுடன் பலத்த காற்று வீசத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. கடந்த சில நாட்களாக பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மற்றும் விவாசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.