நெய்வேலி நகராட்சி அலுவலகம் முன் குடிசை வாசிகள் மாற்று இடம் கேட்டு 2வது நாளாக ஆர்ப்பாட்டம்
நெய்வேலி வட்டம் 24 ஐ சேர்ந்த குடிசைவாழ் மக்கள் நெய்வேலி நகரிய அலுவலகம் எதிரே 2 வது நாளாக இன்றும் ஆர்ப்பட்டம் நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி வட்டம் 24 ஐ சேர்ந்த குடிசைவாழ் மக்கள் நெய்வேலி நகரிய அலுவலகம் எதிரே 2 வது நாளாக இன்றும் ஆர்ப்பட்டம் நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி வட்டம் 24ஐ சேர்ந்த சர்ச் அருகே உள்ள மண்மேடு பகுதியில் வசித்த மக்கள் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டனர். அவர்களை வருவாய் துறையினர் மீட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் நேற்று பள்ளி திறக்கப்பட்டதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். 34 குடும்பத்தினர் தற்போது வசிக்க இடம் இன்றி மாற்று இடம் கேட்டு நகரிய அலுவலகம் முன் உள்ள மரத்தடியில் தங்கி 2வது நாளாக ஆரப்பாட்டம் செய்து வருகின்றனர்.