தனிமனிதனை நெறிப்படும் உயர்ந்த நோக்கை கருத்தாகக் கொண்டுள்ளன தமிழ் இலங்கியங்கள்: முனைவப் பீ.மு.மன்சூர்
தமிழ் இலக்கியங்கள் யாவும், சமுதாயத்தை தனிமனிதனை நெறிப்படுத்தும் உயர்ந்த நோக்கத்தினை அடிக்கருத்தாகக் கொண்டுள்ளன. நல்லவை வாழும், அல்லவை வீழும் எனும் கருத்தியலைப் பண்டைய இலக்கியங்கள் யாவற்றிலும் காணலாம் என பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிமன்றக்குழுஉறுப்பினர் முனைவர் பீ.மு.மன்சூர் தெரிவித்தார்.
தமிழ் இலக்கியங்கள் யாவும், சமுதாயத்தை தனிமனிதனை நெறிப்படுத்தும் உயர்ந்த நோக்கத்தினை அடிக்கருத்தாகக் கொண்டுள்ளன. நல்லவை வாழும், அல்லவை வீழும் எனும் கருத்தியலைப் பண்டைய இலக்கியங்கள் யாவற்றிலும் காணலாம் என பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிமன்றக்குழு
உறுப்பினர் முனைவர் பீ.மு.மன்சூர் தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து செவ்வியல் இலக்கியங்களில் அடிக்கருத்தும், காட்சிப்படுத்துதலும் எனும் தலைப்பில் 10 நாள் பயிலரங்கு தொடக்கவிழா பல்கலைக்கழக மையநூலக கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் ந.பஞ்சநதம் தலைமை வகித்து பயிலரங்க கட்டுரைத் தொகுப்பு நூலை வெளியிட்டு பேசினார். தமிழியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி வரவேற்றார். இந்திய மொழிப்புல முதல்வர் முனைவர் வி.திருவள்ளுவர் முன்னிலை வகித்தார்.
விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு முன்னாள் உறுப்பினர் முனைவர் பீ.மு.மன்சூர் மையக்கருத்துரையாற்றினார். அவர் பேசியது: சங்க அகப்பாடல்கள் கூறும் களவு வாழ்க்கை நெறி தற்காலத்திலும் கடைபிடிக்கப்பட வேண்டிய வாழ்வியில் நெறியாகத் திகழ்கிறது. இவ்வாறே சங்க புறப்பாடல்களில் காணப்படும் போர் மற்றும் ஆட்சி முறை ஆகியவை தற்கால அரசியல் மற்றும்
தனிமனித வாழ்வியல் பின்பற்றத்தக்கதாகும். இதனோடு நாட்டுப்பற்று மற்றும் தனிமனித ஒழுங்கம் ஆகியவற்றை நினைவுபடுத்தும் உயர்ந்த இலக்கியங்களாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன என பீ.மு.மன்சூர் தெரிவித்தார்.
விழாவில் மொழியியல்துறை முன்னாள் இயக்குநர் செ.வை சண்முகம், தமிழியல்துறை முன்னாள் பேராசிரியர் அழ.பழனியப்பன், இந்திய மொழிப்புல முன்னாள் முதல்வர்கள் அ.ஆனந்தநடராஜ தீட்சிதர், துரை.பட்டாபிராமன், வேளாண்புல முன்னாள் பேராசிரியர் பி.பன்னீர்செல்வம், பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், ஹிந்தித்துறை தலைவர் வி.ஜெகநாதரெட்டி, தொலைதூரக்கல்வி இயக்கக
தமிழ்ப்பிரிவு தலைவர் முனைவர் ந.வெங்கடேசன், வாழ்நாள் கற்றல்துறை தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவிப் பேராசிரியர் முனைவர் ப.க.மூவேந்தன் நன்றி கூறினார். உதவிப் பேராசிரியர் ஜா.ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.