முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே உள்ள தனியார் மின்நிலைய நிர்வாக அதிகாரி மர்ம மரணம்

சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள ஐஎல்எஃப்எஸ் தனியார் மின் உற்பத்தி நிலையித்தில் நிர்வாக அதிகாரி குடியிருப்பில் உள்ள அவரது அறையில் வியாழக்கிழமை காலை மர்மமான முறையில் இறந்து

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:49 AM
பகிர்:

சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள ஐஎல்எஃப்எஸ் தனியார் மின் உற்பத்தி நிலையித்தில் நிர்வாக அதிகாரி குடியிருப்பில் உள்ள அவரது அறையில் வியாழக்கிழமை காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேற்குமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34). இவர் சிதம்பரம் அருகே கரிகுப்பத்தில் உள்ள ஐஎல்எஃப்எஸ் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் கணினி பிரிவில் நிர்வாகஅதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை இவர் குடியிருப்பில் உள்ள அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை: கரிகுப்பம் தனியார் மின்உற்பத்தி நிலையத்தில் கடந்த 6 மாதங்களில் 5க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இறந்த ஊழியர் குடும்பத்திற்கு நிர்வாகம் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தொடர் இறப்பு குறித்து சிதம்பரம் உதவிஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என பரங்கிப்பேட்டை ஒன்றிய மார்க்ச்சிஸ்ட் கம்யூ கட்சி செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.