முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கார் மோதியதில் போலீஸார் படுகாயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை ஓரம் பைக்கில் நின்று கொண்டிருந்த போலீஸார் மீது ஞாயிற்றுக்கிழமை கார் மோதியதில் அவர் படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:05 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை ஓரம் பைக்கில் நின்று கொண்டிருந்த போலீஸார் மீது ஞாயிற்றுக்கிழமை கார் மோதியதில் அவர் படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், என்.ஜி.ஓ.ஓ. காலனியில் குடியிருந்து வருபவர் பேச்சியப்பன் மகன் பாலமுருகன் (40). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (38), ஸ்ரீவில்லிபுத்தூ அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருகிறார்.

பாலமுருகன், கீழரதவீதி-தெற்குரதவீதி சந்திப்பில் சாலை ஓரம் மண் தரையில், தனது பைக்கை நிறுத்தி அதில் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது தெற்குரதவீதியிலிருந்து நேராக வந்த கார் பாலமுருகன் உட்கார்ந்திருந்த பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமுற்ற அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கலைச்செல்வி நகர் காவல் நிலையத்தில் கொடுத்தத புகாரின் பேரில் போலீஸார் காரை ஓட்டி வந்த மேட்டுத் தெருவைச் சேர்ந்த சு.சங்கர் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →