தற்போதைய செய்திகள்

தமிழக இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: அன்புமணி

தமிழக இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணன்

தமிழக இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட அடிலம், பந்தாரஅள்ளி, சப்பானிப்பட்டி, சென்னம்பட்டி, உச்சம்பட்டி, பெத்தானூர், மேட்டுக்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் திங்கள்கிழமை மக்களவை தேர்தலில் வெற்றிப்பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளும் 50 ஆண்டுகளாக ஆண்டு மக்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. மதுக்கடைகளை தவிர, எந்த திட்டங்களும் இவ்விருக் கட்சிகளும் அளிக்கவில்லை. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்கின்றனர். இந்த மாற்றத்தை பாட்டாளி மக்கள் கட்சி அளிக்கும். நேர்மையான, புதுமையான ஆட்சி பாமக அளிக்க தயாராக உள்ளது. எனவே, பொதுமக்கள் இதற்கு ஆதரவு தரவேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில், தும்பலஅள்ளி அணை மற்றும் காரிமங்கலம் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு கே.ஆர்.பி.அணையிலிருந்து கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்தத் திட்டம் நிறைவேற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தேவைப்பட்டால் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT