விராலிமலையில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதல்: இளைஞர் இருவர் சாவு
விராலிமலை அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதியதில் இளைஞர் இருவர் உயிரிழந்தனர்.
விராலிமலை அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதியதில் இளைஞர் இருவர் உயிரிழந்தனர்.
விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் கலிங்கிகாடுவைச் சேர்ந்த அழகர் மகன் ஏழுமலை(23), வேலு மகன் குணசேகர்(18) மற்றும் பட்டுக்கோட்டை பள்ளத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் தங்கராசு(23) இவர்கள் மூவரும் கட்டடத்தொழிலாளிகள்.
இந்நிலையில் இவர்கள் மூவரும் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளிள் சென்றுகொண்டிருந்தனர். கொடும்பாளூர் புதுக்கோட்டை சாலை பிடாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தங்கராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனை கொண்டும் செல்லும் வழியில் ஏழுமலை உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் குணசேகர் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து விரலிமலை காவல் ஆய்வாளர் அ.மா. செந்தில்மாறன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்..