தற்போதைய செய்திகள்

திருச்சுழி அருகே பள்ளி மாணவன் மாயம் தந்தை புகார்

விருதுநகர் அருகே பள்ளிக்கு போவதாக கூறிச் சென்ற மாணவன் மாயமானது தொடர்பாக வெள்ளிக்கிழமை எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் தந்தை புகார் செய்தார். 

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பள்ளிக்கு போவதாக கூறிச் சென்ற மாணவன் மாயமானது தொடர்பாக வெள்ளிக்கிழமை எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் தந்தை புகார் செய்தார். 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கரிசல்குளம் காலனியைச் சேர்ந்த பாண்டியின்(41) மகன் மாதவன்(14). இவர் அருகில் உள்ள முத்துராமலிங்காபுரம் கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாராம். இவர் வழக்கம் போல் வியாழக்கிழமை காலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி புறப்பட்டுச் சென்றாராம். ஆனால், பள்ளிக்கூடம் விட்ட பின்பும் மாலையி்ல நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

எனவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்துள்ளனர். அதில் மாணவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லையாம். உடனே இது தொடர்பாக எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் பாண்டி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT