தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் கோவிலுக்கு வீரத்தமிழர் முன்னணி பேரணி

திருச்செந்தூர் கோவிலில் மூலவரான முருகனுக்கு தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வீரத்தமிழர் முன்னணி சார்பில் பேரணி நடைபெற்றது.

சிஷ்யன்

திருச்செந்தூர் கோவிலில் மூலவரான முருகனுக்கு தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வீரத்தமிழர் முன்னணி சார்பில் பேரணி நடைபெற்றது.

திருச்செந்தூர் கோவிலில் மூலவரான முருகன் தமிழர்களின் முப்பாட்டனாவார். அவருக்கு தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் திருச்செந்தூரில் பேரணி நடைபெற்றது.

திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரவுண்டானாவிலிருந்து தொடங்கிய பேரணிக்கு நாம் தமிழர் கட்சி மாநில வழக்குரைஞரணி செயலர் தா.மி.பிரபு தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலர்கள் மணிசெந்தில், அறிவுச்செல்வன், கல்யாணசுந்தரம், துருவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்மண்டல செயலர் சிவக்குமார் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது காமராசர் சாலை, ரதவீதிகள் வழியாக சென்று திருச்செந்தூர் கோவிலில் நிறைவு பெற்றது.

இதில் வீரத்தமிழர் முன்னணி மாநில செயலாளர்கள் ஒட்டக்குத்தன், செந்தில்சேகுவேரா, கரூர்முரளி, தூத்துக்குடி மாவட்ட செயலர் பாபு உள்ளிட்ட பலர் கையில் வேல் ஏந்தியும், காவடி எடுத்தும், பதாகைகளை தூக்கியவாறு பேரணியில் பங்கேற்றனர். திருச்செந்தூர் தொகுதி செயலர் மனோகரன் பேரணியை முடித்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்டாா் சைக்கிள் - காா் மோதல் தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

சக்தி வராகி அம்மன் கோயில் தேய்பிறை சஷ்டி சிறப்பு பூஜை

முதுநிலை ஆசிரியா் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 5,475 போ் எழுதினா்

பருவமழை நோய்களைத் தடுக்க தொடா் கண்காணிப்பு: ஆட்சியா்

பிகா​ரில் ஆட்சி​யைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

SCROLL FOR NEXT