முகப்பு
தற்போதைய செய்திகள்

சுமை ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சுமை ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் புதன்கிழமை இரவு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சுமை ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் புதன்கிழமை இரவு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா மகன் சூர்யா(23).இவர், தனது  மோட்டார் சைக்கிளில் அதே ஊரைச் சேர்ந்த பாலன் மகன் பிரபாகரன் (22),சின்னராசு மகன் தினேஷ்குமார்( 25) ஆகியோருடன் ஆலங்குடிக்கு சென்றுவிட்டு புதன்கிழமை இரவு  அணவயல் திரும்பியுள்ளனர்.           

அவர்கள் வடகாடு காமராஜபுரம் அருகே சென்றபோது, அவ்வழியாகச் சென்ற சுமை ஆட்டோவின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சுர்யா நிகழ்விடத்திலே  இறந்தார்.படுகாயமடைந்த பிரபாகரன் திருச்சி தனியார் மருத்துவமனையிலும்,  தினேஷ்குமார்  ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்கு பதிவு செய்து சுமை ஆட்டோ ஓட்டுநர் வன்னியன்விடுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் பாண்டியராஜனை(20) கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →