விருதுநகர் மாவட்டத்தில் 28 தனிப்பிரிவு காவலர்கள் அதிரடி மாற்றம்
விருதுநகர்.விருதுநகர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தனிப்பிரிவில் பணியாற்றி வந்த 28 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அதிரடியாக காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய செய்திகள்விருதுநகர் மாவட்டத்தில் 28 தனிப்பிரிவு காவலர்கள் அதிரடி மாற்றம்
விருதுநகர்.விருதுநகர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தனிப்பிரிவில் பணியாற்றி வந்த 28 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அதிரடியாக காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர்.விருதுநகர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தனிப்பிரிவில் பணியாற்றி வந்த 28 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அதிரடியாக காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது காவல் நிலையங்களில் பணிபுரியும் ஏனைய காவலர்களிடம் மிகுந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் ரகசிய தகவல்கள், பிரச்சனைகள், காவல் நிலையங்களில் உள்ள பிரச்னைகள் போன்றவற்றைக் கூறுவதற்காக தனிப்பிரிவு உண்டு.
இதில் பணிபுரியும் காவலர்கள் சீருடை அணியாமல் பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு காவல் ஆய்வாளர் முதற்கொண்டு அனைத்து காவலர்களும் தனி மரியாதை அளிப்பார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாகவும் தனிப்பிரிவில் கொடிகட்டி பல காவலர்கள் பறந்து வந்தார்கள். இது காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலானால் வேறொரு காவல் நிலையத்திற்கு போகவேண்டும். ஆனால் இவர்கள் எந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் வந்தாலும் மாறாமல் தனி சாம்ராஜ்யம் செய்து வருகிறார்களே என்று புலம்பி வந்தனர்.இந்நிலையில் வியாழக்கிழமை தனிப்பிரிவு காவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், இவர்களிடம் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் காவலர்கள் தாங்கள் விரும்பும் காவல் நிலையங்களுக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு உடனடியாக செல்ல உத்தரவிட்டார்.
இதில் 28 பேர் பல ஆண்டுகளாக தனிப்பிரிவில் வேலை செய்தவர்கள். இவர்கள் மிகுந்த மன வேதனையுடம் காவல் நிலையங்களுக்கு செல்கிறார்கள்.மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருபவர்களுக்கு அடுத்த மாறுதல் வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புதியதாக பொறுப்பேற்றுள்ள காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கைகள் காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.