முகப்பு
தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலை.யில் மாநில அளவிலான கால்பந்து, கூடைப்பந்துப் போட்டி: நவ.23-க்குள் பதிவு செய்யலாம்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான கால்பந்து மற்றும் கூடைப்பந்துப் போட்டிகள் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:32 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான கால்பந்து மற்றும் கூடைப்பந்துப் போட்டிகள் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன், சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்க குறிப்பு:கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் பள்ளி மாணவ மாணவியருக்கு தனித்தனியான கால்பந்து மற்றும் கூடைப் பந்துப் போட்டிகள் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 15 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவ மாணவியர் தனித்தனியே, குழுவுடன் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

வெற்றிபெற்ற மாணவ மாணவியர் குழுவிற்கு தனித்தனியே முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.8 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.போட்டிக்கு வருவோருக்கு தங்கும் இடம் மற்றும் உணவு பல்கலைக்கழகம் சார்பில் இலவசமாக வழங்கப்படும். மேலும் வெற்றி பெற்ற குழுவில் உள்ள மாணவ மாணவியர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2016-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் தொழில்நுட்பத் துறை படிப்பில் சேருவதற்கு கட்டணச் சலுகை அளிக்கப்படும்.

போட்டிக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், மாணவர் சேர்க்கைப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.என்.ராமசாமி ஆகியோர் செய்து வருகிறார்கள்.பங்கேற்கும் மாணவ மாணவியர் தங்களது பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக நவம்பர் 23-ம் தேதிக்குள் தங்களது பெயர்களை 97882-25996, 97891-23630 ஆகிய செல்போன் எண்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →