முகப்பு
தற்போதைய செய்திகள்

விராலிமலை அருகே உலக நன்மை வேண்டி குரும்பச்சி அம்மனுக்கு 16 வகையான பூஜை

விராலிமலை அருகே உள்ள விராலூர் குரும்பச்சி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 16 வகையான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:42 AM
பகிர்:

விராலிமலை அருகே உள்ள விராலூர் குரும்பச்சி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 16 வகையான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பலநூற்றாண்டுகளாக விராலூரில் அமைந்துள்ள குரும்பச்சி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும், அப்பகுதியில் உள்ள 25 க்கும் மேற்பட்ட கிராமங்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் இக்கோயிலில், ஊர் மக்கள் ஒன்றுகூடி உலக நன்மை, மழை வேண்டி ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் 16 வகையான சிறப்பு பூஜைகள் நடத்தினர் பின்னர் பெண்கள் கும்மியடித்து, அம்மன் பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.