முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் நடத்தை விதிமீறல்: 17 வழக்குகளில் 23 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் நடத்தை விதிமீறல் தொடர்பாக கட்சியினர் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் நடத்தை விதிமீறல்: 17 வழக்குகளில் 23 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் நடத்தை விதிமீறல் தொடர்பாக கட்சியினர் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் நடத்தை விதிமீறல் தொடர்பாக கட்சியினர் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

நகர் காவல் சார்பு ஆய்வாளர் கீதா, பெருமாள்பட்டி வாக்குச் சாவடியில் பணியிலிருந்தபோது, சி.பன்னீர்செல்வம் (40), கு.கோவிந்தன் (38) ஆகியோர் தே.மு.தி.க. கட்சித் துண்டுடன் நின்று கொண்டு அவர்கள் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டியதாக கைது செய்யப்பட்டனர்.

மேலும் இதே வாக்குச் சாவடியில் வை.மாயாண்டி (54) என்பவர் திமுக கட்சித் துண்டுடன் நின்று கொண்டு அவர்களது கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டியதாக கைது செய்யப்பட்டார். நகர் காவல் ஆய்வாளர் ஜே.மகேஸ்குமார், திரு.வி.க. பள்ளி வாக்குச் சாவடியில் பணியில் இருந்தபோது, பெரும்பள்சேரியைச் சேர்ந்த மூ.வைரகுமார் (35) என்பவர் திமுக கட்சி தொப்பியுடன் நின்று கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டியதாக கைது செய்யப்பட்டார்.நகர் காவல் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் சித்தாலம்புத்தூர் வாக்குச் சாவடியில் பணியில் இருந்தபோது, திமுக கட்சி தொப்பியுடன் மா.பாண்டியன் (54) என்பவர் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டியதாக கைது செய்யப்பட்டார். அத்திகுளம் வாக்குச் சாவடி அருகே கோ.கிருஷ்ணன் (52), க.தங்கையா (65), பா.மயில்ராகவன் (52) ஆகியோர் அதிமுக கட்சிக்கு ஆதரவாக கொடி, பேட்ஜ் அணிந்து அவர்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டியதாக நகர் காவல் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் மூவரையும் கைது செய்தார். கிருஷ்ணன்கோவில் தெரு வாக்குச் சாவடியில் நாகபாளையம் ச.முருகன் (28) என்பவர் அதிமுகவிற்கு ஆதரவு திரட்டியதாகக் கைது செய்யப்பட்டார்.

இதே வாக்குச் சாவடி அருகே பா.ஜ.க. துண்டு, தொப்பி அணிந்து அத்திகுளம் கோ.பச்சைராஜன் (39), சி.பாலகுரு (30) ஆகியோர் அவர்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்ததகாக் கைது செய்யப்பட்டனர். கடம்பன்குளம் வாக்குச் சாவடி அருகே தேமுதிக துண்டு அணிந்து வீ.சண்முகநாதன் (42) என்பவர் வாக்கு சேகரித்ததாகக் கைது செய்யப்பட்டார்.வன்னியம்பட்டி: இனாம்கரிசல்குளம் வாக்குச் சாவடி அருகே அதிமுக கட்சிக்கு ஆதரவாக கட்சித் துண்டு அணிந்து கி.பாலமுருகன் (31) என்பவர் வாக்கு சேகரித்ததாகக் கைது செய்யப்பட்டார்.வன்னியம்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் விஜி, பிள்ளையார்குளம் வாக்குச் சாவடி அருகே பணியிலிருந்தபோது, செ.சண்முகசுந்தரம் (48) என்பவர் அதிமுக விற்கு வேட்பாளர் படம் மற்றும் கட்சி சின்னம் காட்டி வாக்கு சேகரித்ததாக கைது செய்யப்பட்டார்.

வேப்பங்குளம் வாக்குச் சாவடி அருகே சார்பு ஆய்வாளர் விஜி பணியிலிருந்தபோது, ப.ராதாகிருஷ்ணன் (32) என்பவர் அதிமுக வினர் வாக்காளர்களுக்கு இலவசமாக டீ கொடுத்துக் கொண்டிருந்துள்ளார்கள். இவர் கைது செய்யப்பட்டார். இனாம் கரிசல்குளம் வாக்குச் சாவடி அருகே தேமுதிக கட்சித் தலைவர் படம் கொண்ட பேட்ஜ் அணிந்து முறையற்ற தன்மையில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த பா.மாரியப்பன் (40) என்பவர் கைது செய்யப்பட்டார்.ஆள்மாறாட்டம் செய்ய முயன்றவர் கைது:எம்.ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர்நஆசிரியை கு.ஷியாமளாதேவி (54). இவர் வடக்கு கரிசல்குளத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு அதிகாரியாக பணியில் இருந்தார்.

அப்போது இதே இடத்தைச் சேர்ந்த மாசாணன் மகன் கருப்பசாமி (34) என்பவர், பா.சந்திரமோகன் என்பவரது பெயர் எழுதப்பட்ட வாக்குச் சீட்டை கையில் வைத்துக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து வாக்குப் பதிவு செய்ய வந்துள்ளார். இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் ஷியாமளாதேவி புகார் செய்தார். சார்பு ஆய்வாளர் விஜி, வழக்குப் பதிவு செய்து கருப்பசாமியைக் கைது செய்தார்.மல்லி: உள்ளூர்பட்டி வாக்குச் சாவடி அருகே செ.தங்கவேல் (70) என்பவர் அதிமுக கட்சிக்கு ஆதரவாக துண்டு அணிந்து கொண்டு, வாக்காளர்களிடம் அதிமுகவிற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டிருந்தாராம். இவரை மல்லி போலீஸார் கைது செய்தனர். மம்சாபுரம்: மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு எதிரேயுள்ள கோவிலில் வைத்து சு.ராமசந்திரன், க.கலையரசன் ஆகியோர் திமுகவிற்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு டீ கொடுத்தார்களாம்.

இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.இதே வாக்குச் சாவடி அருகே அதிமுகவைச் சேர்ந்த பா.சிவஞானபாண்டியன் என்பவர், கட்சிக் கொடி மற்றும் பனியன் அணிந்து கொண்டு வாக்கு சேகரித்ததாகக் கைது செய்யப்பட்டார்.இதே வாக்குச் சாவடி அமைந்துள்ள பள்ளி நுழைவு வாயில் அருகே மம்சாபுரம் கீழூர் ராஜேந்திரன் மகன் அண்ணாத்துரை (22) மற்றும் பொன்னுச்சாமி மகன் ரவி (22) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும், இடையூறாகவும் மது குடித்துவிட்டு, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்துள்ளார்கள். இது குறித்து பயிற்சி சார்பு ஆய்வாளர் பாக்கியமேரி, மம்சாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →