முகப்பு
தற்போதைய செய்திகள்

சோனியாவிடம் முறையிட  முன்னாள் அமைச்சர் மங்கத்ராம் சிங்கால் முடிவு: மாநகராட்சி தேர்தல் விவகாரம்

தில்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தில்லி முன்னாள் அமைச்சர் மங்கத்ராம் சிங்கால் குற்றம்சாட்டியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:13 PM
பகிர்:

தில்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தில்லி முன்னாள் அமைச்சர் மங்கத்ராம் சிங்கால் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் முறையிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தில்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தில்லி காங்கிரஸின் மூத்த தலைவர்கள் தினந்தோறும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கட்சியில் இருந்து விலகப் போவதாகவும் மூத்த தலைவரும் முன்னாள் தில்லி அமைச்சருமான ஏ.கே. வாலியா கடந்த சில தினங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிருப்தி அடைந்த தொண்டர்கள் சிலர் தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் ஒரு பகுதியை செவ்வாய்க்கிழமை சூறையாடினர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பர்வேஸ் ஹஸ்மியின் அரசு பங்களாவில் தில்லியின் முன்னாள் அமைச்சர் மங்கத்ராம் சிங்கால் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
 தில்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

இதற்கு தில்லி காங்கிரஸ் தலைவராக இருக்கும் அஜய் மாக்கனும் பொறுப்பு. இந்த விவகாரத்தில் அஜய் மாக்கன் தன்னிச்சையாக செயல்படுகிறார். இதனால் தில்லி காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவரின் குடும்பத்தினர் 4 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க பணமும் பெறப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இது குறித்து அஜய் மாக்கன் விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து முறையிட உள்ளேன் என்றார்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிருப்தி தில்லி காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், "தில்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து அஜய் மாக்கனிடம் பேச பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. இது வெறும் வேட்பாளர்கள் தேர்வு மட்டும் அல்ல; தில்லியில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமும் அடங்கி உள்ளது' என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →