முகப்பு
தற்போதைய செய்திகள்

பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17 புள்ளிங்கள் உயர்வு

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில்  சென்செக்ஸ் 17 புள்ளிங்கள் உயர்ந்து 29,336 புள்ளிகளாக உள்ளது.

Updated On : 19 ஏப்ரல், 2017 at 4:09 PM
பகிர்:

மும்பை:  மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில்  சென்செக்ஸ் 17 புள்ளிங்கள் உயர்ந்து 29,336 புள்ளிகளாக உள்ளது.

அதேபோல் நிஃப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 9,103 புள்ளிகளாகி உள்ளது. காலை வர்த்தக நேர தொடக்கத்தின் போது அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து, ரூ.64.55-ஆக வர்த்தகமானது.

உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை விற்பனை செய்ததன் எதிரொலியாகவும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.