முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக சட்டப்பேரவை ஒன்றும் அதிமுக பொதுக்கூட்ட மேடையல்ல: துரைமுருகன் சுளீர்

தமிழக சட்டப்பேரவை ஒன்றும் அதிமுக பொதுக்கூட்ட மேடையில்லை என திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்பு செய்தது.

இதையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவரான துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக-வுக்கு சட்டப்பேரவை மரபுகள் சரிவரத் தெரியவில்லை. அவர்கள் தமிழக சட்டப்பேரவையை பொதுக்கூட்ட மேடையாக மாற்றி வருகின்றனர். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகழ் பாடுகின்றனர்.

நான் இதுவரை அதிமுக பொதுக்கூட்ட மேடைப் பேச்சினை கேட்டதில்லை. ஆனால், இப்போது சட்டப்பேரவையில் அதைத்தான் கேட்கிறேன் என்று குற்றஞ்சாட்டினார்.

முழு கட்டுரையைப் படிக்க →