முகப்பு
தற்போதைய செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி மும்பையில் கைது

லஷ்கர்-இ-தொய்பா சர்வதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி மும்பை விமானநிலையத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டான்.

Updated On : 17 ஜூலை, 2017 at 8:12 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:57 PM

சர்வதேச பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான சலீம் கான் மும்பை விமான நிலையத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டான்.

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவன் இந்த சலீம் கான். இந்தியாவில் தேடப்பட்டு வரும் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளான். 

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் சலீம் கான் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டான். மும்பை காவல்துறை மற்றும் உத்திரப்பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவு படையினர் ஆகியோரின் கூட்டு முயற்சியல் சலீம் பிடிபட்டான்.

Advertisement

அரபு நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய போது மும்பை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் அவனை கைது செய்தனர். மேலும், அவனிடம் தீவிர விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.