முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் எல்லைப் பலகை

இந்தியாவை தொடர்ந்து இலங்கை கடற்பகுதியில் இலங்கை அரசும் இந்திய மீனவர்களை அறிவுறுத்தும் வகையில் கடல் பகுதியில் எல்லைப் பலகை

Updated On : 6 மே, 2017 at 10:57 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:57 PM

கொழும்பு: இந்தியாவை தொடர்ந்து இலங்கை கடற்பகுதியில் இலங்கை அரசும் இந்திய மீனவர்களை அறிவுறுத்தும் வகையில் கடல் பகுதியில் எல்லைப் பலகை அமைத்துள்ளது.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க எல்லைப்பலகையை வைத்துள்ளது இலங்கை அரசு. இலங்கையில் இருந்து 5வது மணல் திட்டில் இலங்கை கொடியுடன் எல்லைப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தனுஷ்கோடியில் இருந்து 5-வது மணல்திட்டில் இந்தியஅரசு எல்லைப் பலகை வைத்துள்ள நிலையில், இலங்கை அரசும் தற்போது எல்லைப் பலகை அமைத்துள்ளது.

Advertisement

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை சிறைப் பிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால், இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. அதேபோல், எல்லை தாண்டும் இலங்கை மீனவர்களும் அவ்வப்போது சிறை பிடிக்கப்படுவதும் விடுக்கப்படுவதும் வழக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.