முகப்பு
தற்போதைய செய்திகள்

எதிர்பார்த்ததை விட புளூட்டோ குளிர்ச்சியாக கோள்!

புளூட்டோவின் வளிமண்டலத்தை படர்ந்து இருக்கும் துகள்களால் எதிர்பார்த்ததை விட புளூட்டோவின் வளிமண்டம் மிகவும் குளிர்சியாக உள்ளதாக  நாசா ஏவிய நியூ ஹோரைசான் விண்கலத்தின் ஆய்வு முலம் 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

புளூட்டோவின் வளிமண்டலத்தை படர்ந்து இருக்கும் துகள்களால் எதிர்பார்த்ததை விட புளூட்டோவின் வளிமண்டம் மிகவும் குளிர்சியாக உள்ளதாக  நாசா ஏவிய நியூ ஹோரைசான் விண்கலத்தின் ஆய்வு முலம் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் ஜி.ஜாங் கூறும் போது, வளிமண்டலத்தில் உள்ள இரசாயன எதிர்வினைகளைப் பொறுத்தும், சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர் வீச்சும், நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகியவற்றின் சிறு சிறு கலவையே பல்லாயிரக்கணக்கான துகள்களாக உருவாகி வளிமண்டலத்தில் படர்ந்து இறுதியில் இறுகி விடுகின்றன. 

இந்த ஹைட்ரோகார்பன் துகள்கள் சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்துடன் புளூட்டோவின் மேற்பரப்பில் காணப்படும்.  வளிமண்டலத்தின் உள்ள வாயு அளவை வைத்தே அங்குள்ள வெப்பத்தை தீர்மானிக்க முடியும் அந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நாசா ஏவிய நியூ ஹோரைசான் விண்கலத்தின் ஆய்வு மூலம் புளூட்டோவின் வளிமண்டம் மிகவும் குளிர்சியாக உள்ளதாக தெரியவந்துள்ளது என்றார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →