தற்போதைய செய்திகள்

ஓடுபாதையை விட்டு ஓடிய ஜெட் ஏர்வேஸ் விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

ரியாத் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஆ737-800 ஜெட் ஏர்வேஸ் விமானம், ஓடுபாதையை விட்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ANI


ரியாத்: ரியாத் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஆ737-800 ஜெட் ஏர்வேஸ் விமானம், ஓடுபாதையை விட்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சவுதியின் ரியாத் நகரில் இருந்து மும்பைக்கு இன்று அதிகாலை ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அதில் 142 பயணிகள் 7 ஊழியர்கள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடி உயரே எழும்பும் சமயத்தில், திடீரென ஓடுபாதையை விட்டு விலகி ஓடியது. 

இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, சிறிது தூரத்திலேயே விமானத்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் அனைவரும் எந்தவித காயங்களுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT