அப்போலோ மருத்துவமனையில் மு.க. ஸ்டாலின் அனுமதி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மருத்துவர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றார். பின்னர், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளதாகவும், வழக்கான சிகிச்சைகள் முடிந்ததும் இன்று வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இதனிடையே, அவர் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.