தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்  

அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்

DIN


சென்னை: அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், வடமேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத்தால் தென்மேற்குப் பருவகாற்றைக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கலில் ஒருசில இடங்கலில் லேசானசு முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என புவியரசன் கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எஸ்.வி., முதல் அனிருத் வரை : விரும்பி கேட்கும் பாடல்கள் குறித்து மு.க. ஸ்டாலின் பேச்சு!

அன்பால் நிறைய வேண்டும் அகிலம் : மு.க. ஸ்டாலின்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் டிரோன்கள்! ஒரே வாரத்தில் 3 வது முறை!

158 வகை உணவுகளுடன் மாப்பிளைக்கு தல பொங்கல் விருந்து!

அனுமன் சிலையை 4 மணிநேரம் சுற்றிவந்து வழிபட்ட நாய்!

SCROLL FOR NEXT