முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்!

கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4வது முறையாக பதவிற்றார். ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு விதித்துள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:38 AM
பகிர்:


கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4வது முறையாக பதவிற்றார். ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு விதித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தது. முதல்வர் குமாரசாமி ஆளுநரை சந்தித்து ராஜிநாமா கடிதம் அளித்துவிட்டார். உடனடியாக, எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றுவரை அதுகுறித்து ஏதும் தகவல் வெளியாகவில்லை. அதேசமயம், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சி கவிழ காரணமான எம்எல்ஏக்களில் 3 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். மற்ற அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதம் குறித்தும் முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை, எடியூரப்பாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக்கோரினார். 

ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள கடிதத்தை காட்டினார். இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் எடியூரப்பா தெரிவித்தார். 

இந்நிலையில், கர்நாடக முதல்வராக 4-வது முறையாக எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவுக்கு ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு விதித்துள்ளார். 

கர்நாடகா ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். பெரும்பான்மையை நிரூபித்த பிறகு அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →