ஹிமாசலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு
ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் சம்பா பகுதியில் நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.4 அலகுகளாகப் பதிவான இந்த
ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் சம்பா பகுதியில் நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.4 அலகுகளாகப் பதிவான. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் இல்லை.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
ஹிமாசலப் பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.4 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், மாவட்டத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.