முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவாரூரில் ஓவியம் வரைந்து கரோனா விழிப்புணர்வு

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸின் உருவம் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தற்போதைய செய்திகள்

திருவாரூரில் ஓவியம் வரைந்து கரோனா விழிப்புணர்வு

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸின் உருவம் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:25 PM
பகிர்:


திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸின் உருவம் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸின் உருவத்தை தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் வரைந்து, தனித்திரு விழித்திரு வீட்டில் இரு என்ற வாசகத்தை எழுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் போலீசார் துப்புரவு பணியாளர்கள் மருத்துவர்கள் ஆகியோரின் பணிகள் குறித்தும் அவர்களுக்கு உதவும் வகையில் பொதுமக்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →