முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

பருவமழை காரணமாக தலைநகர் தில்லியின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
தில்லியின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
பகிர்:

புதுதில்லி: பருவமழை காரணமாக தலைநகர் தில்லியின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தில்லி, காசியாபாத், கிரேட்டர் நொய்டா மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பருவமழை காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில்  மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. 

பருவமழையால் மும்பை நகரில் கடந்த இரண்டு தினங்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →