சாலை தடுப்பில் பைக் மோதியதில் ஒருவர் சாவு
திருவள்ளூர் அருகே சாலை தடுப்பின் மீது பைக் மோதி தூக்கி வீசியதில் தலையில் பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக மப்பேடு காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாலை தடுப்பின் மீது பைக் மோதி தூக்கி வீசியதில் தலையில் பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக மப்பேடு காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மப்பேடு காவல் நிலைய காவலர்கள் தரப்பில் புதன்கிழமை கூறியதாவது: திருவள்ளூர் பெரியகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஜெயபால்(43). இவர், கடந்த ஓராண்டாக வேலை நிமித்தம் காரணமாக காஞ்சிபுரத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இதனிடையே வாடகை வீட்டிற்கு மின்கட்டணம் செலுத்திவிட்டு, மாலையில் தனது தாயாரை பார்ப்பதற்காக திருவள்ளூருக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது, சுங்குவார்சத்திரத்தில் இருந்து மப்பேடு நோக்கி வரும் போது எதிர்பாரத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதியது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ஜெயபால் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக அவர் சகோதரர் ஜெயபிரகாஷ் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.