முகப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய ஜப்பானில் அதிகரிக்கும் கரோனா : அவசர நிலை அறிவிப்பு

மத்திய ஜப்பானில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலையை அறிவித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
மத்திய ஜப்பானில் அதிகரிக்கும் கரோனா : அவசர நிலை அறிவிப்பு
பகிர்:

டோக்கியோ, ஆகஸ்ட் 6: மத்திய ஜப்பானில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலையை அறிவித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய ஜப்பான் மாகாணத்தில் ஜூலை 15 முதல் நாள்தோறும் 100 க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

மத்திய ஜப்பான் ஆளுநர் ஹிடாகி ஓமுரா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த அவசரகால நிலையில் வணிக வளாகங்கள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

மக்கள் கூட்டமாக பொது இடங்களில் கூட வேண்டாம். இந்த தொற்றால் பாதிக்கப்படும் 70 சதவீத மக்கள் 30 வயதுடையோர். பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு தொற்றின் அறிகுறி இல்லை. 

நோய்த் தொற்று பரவாமல் தடுக்க இரவு நேரங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →