ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்பு
ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜம்மு-காஷ்மீர் தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜம்மு-காஷ்மீர் தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
இதனால் ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக அக்டோபர் 31-ஆம் தேதி குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிரிஸ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டார். இதனால் ஜம்மு-காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநர் என்ற சிறப்பை அவர் பெற்றார். எனினும் 9 மாதங்களுக்கு பின்னர் நேற்று முன் தினம் (புதன் கிழமை) அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை அடுத்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா ஜம்மு-காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநராக பதவியேற்ற முதல் அரசியல்வாதி என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் காஸிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.