முகப்பு
தற்போதைய செய்திகள்

மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ.25 ஆயிரம் மருந்துகள் 

கரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தருவதற்காக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ.25000 மதிப்பிலான மருந்துகள் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ.25 ஆயிரம் மருந்துகள் 
பகிர்:

சிதம்பரம், ஆக.7: கரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தருவதற்காக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ.25000 மதிப்பிலான மருந்துகள் வழங்கப்பட்டது.

கரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் வழிகாட்டுதல்படி கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதி மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான மருந்து பொருள்களை வழங்கினர். 

சிதம்பரம் உதவி ஆட்சியர் விசுமகாஜன் மற்றும் அண்ணாமலைநகர் செயல் அலுவலர்  வெங்கடரமணன் ஆகியோரிடம்  தமிழ்நாடு மருந்தாளுனர் சங்க செயலாளர் ஜோ.வெங்கடசுந்தரம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட மருந்து மொத்த பிரிவு தலைவர் பிரகாஷ், சிதம்பரம் தாலுகா மருத்து வணிகர்கள் சங்க பொருளாளர் கண்ணன் மற்றும் உறுப்பினர் மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →