மகாராஷ்டிரம் : புதிதாக 187 காவலர்களுக்கு கரோனா உறுதி
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 187 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 187 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்திர காவல் துறை வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 187 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த காவலர்களின் எண்ணிக்கை 10,614 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து காவல்துறையின் மொத்த பலியின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.
தர்போது தொற்றில் இருந்து குணமடைந்த காவலர்களின் எண்ணிக்கை 8,604 ஆக உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் காவலர்களின் எண்ணிக்கை 1,896 ஆக உள்ளது என தெரிவித்தனர்.