ராஜஸ்தானில் இன்று 499 பேருக்கு கரோனா
ராஜஸ்தானில் இன்று புதிதாக 499 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ராஜஸ்தானில் இன்று புதிதாக 499 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 499 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 50,656 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த பலியின் எண்ணிக்கை 776 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 115 பேர் குணமடைந்தனர் இதையடுத்து தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 36,310 ஆக உள்ளது.
தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13,560 ஆக உள்ளது என தெரிவித்தனர்.