ராஞ்சியில் இருந்து புறப்பட்ட விமானம் மீது பறவை மோதல்
ராஞ்சியில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதியதால் விமானம் நிறுத்தப்பட்டது.
ராஞ்சியில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதியதால் விமானம் நிறுத்தப்பட்டது.
இது குறித்து ஏர் ஏசியா இந்தியா செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில்,
ஏர் ஏசியா இந்தியா விமானம் விடி-எச்.கே.ஜி ராஞ்சியில் இருந்து மும்பைக்கு இன்று காலை 11.50 மணிக்கு புறப்பட தயாரானது. விமானம் புறப்படும் போது பறவை மோதியதால் விமானி ஓடுதளத்திலேயே விமானத்தை நிறுத்துவிட்டார்.
தற்போது பறவை மோதிய விமானம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மேலும், விமானம் முழுவதுமாக பரிசோதித்த பின்னர் மீண்டும் திட்டமிட்டபடி புறப்படும் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.