தற்போதைய செய்திகள்

மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் பதவி விலகினர்

PTI

இம்பால், ஆகஸ்ட் 11: மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்பித்தனர்.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஹென்ரி சிங் செவ்வாய்க்கிழமை கூறுகையில்,

மணிப்பூரில் திங்கள் கிழமை நடைபெற்ற சட்டசபையின் ஒரு நாள் கூட்டத்தை கங்கிரஸ் கட்சியின் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அவர்களில் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

நேற்றைய கூட்டம் முடிந்தவுடன் சபாநாயகரிடம் அவர்கள் ராஜினாமா கடிதத்தை சமர்பித்தனர். இன்னும் சபாநாயகர் கடிதத்தை ஏற்கவில்லை என கூறினார்.

மணிப்பூரில் 60 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சட்டமன்றத்தில் சபாநாயகர் உட்பட 53 பேர் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர்.

முன்னதாக நான்கு உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர், மேலும் பாஜகவில் மூன்று பேர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆளும் பாஜக கூட்டணியில் சபாநாயகர் உள்பட 29 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். காங்கிரசில் 24 பேர் இருந்தனர், அவர்களில் எட்டு பேர் பங்கேற்கவில்லை.

அதனால் பாஜக தலைமையிலான பிரேன் சிங் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT