கரோனாவை வென்ற 98 வயதான போர் வீரர்
கரோனாவால் பாதிக்கப்பட்ட 98 வயதான ஓய்வுபெற்ற போர் வீரர் ராமு லக்ஷ்மன் சக்பால் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட 98 வயதான ஓய்வுபெற்ற போர் வீரர் ராமு லக்ஷ்மன் சக்பால் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
மும்பை நெருல் பகுதியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற போர்வீரர் சிப்பாய் ராமு லக்ஷ்மன் சக்பால் (வயது 98). இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கப்பல் அஸ்வினி கடற்படை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் கரோனா தொற்றை வென்று அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் என இந்திய கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கரோனாவில் இருந்து மீண்ட சக்பாலை கப்பல் அஸ்வினி கடற்படை மருத்துவமனையின் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கரோனாவுக்கு எதிராக ராணுவ மருத்துவமனைகளும் தங்கள் பணிகளை செய்து வருகின்றது.