முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவில் 13.9 லட்சமாக அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு - ஐசிஎம்ஆர்

இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.9 லட்சமாக இந்த வருடம் அதிகரிக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
இந்தியாவில் 13.9 லட்சமாக அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு
பகிர்:

இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.9 லட்சமாக இந்த வருடம் அதிகரிக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நோய் ஆராய்ச்ச்சி மற்றும் தகவல் மையம் வெளியிட்ட அறிக்கையில், 2020-ம் ஆண்டு இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 6,79,421 ஆக இருக்கும். 2025-ம் ஆண்டு 7,63,575 ஆக அதிகரிக்கும்.

புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டு 7,12,758 ஆக இருக்கும். இதில் மார்பாக புற்றுநோயால் 2,38,908 பேர், நுரையீரல் புற்றுநோயால் 1,11,328 பேர் மற்றும் வாய் புற்றுநோயால் 90,060 பேர் பாதிக்கப்படுவார்கள். மேலும், 2025-ம் ஆண்டு 8,06,218 ஆக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பில் 27.1 சதவீதம் (3.7 லட்சம் பேர்) புகையிலையால் பாதிக்கப்படுவார்கள். வடகிழக்கு மாநிலங்காளில் உள்ளவர்கள் அதிகளவில் இரைப்பை குடல் மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →