முகப்பு
தற்போதைய செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 243 கோடி திட்டப் பணிகள்: முதல்வர் நாளை மறுநாள் தொடக்கி வைக்கிறார்

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.243.35 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
முதல்வர் வருகை தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியரகத்தில் நேரில் பார்வையிட்ட அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ரூ.243.35 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் அதிகாரிகளுடன் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியது: நாமக்கல் மாவட்டத்திற்கு கரோனா ஆய்வு பணிக்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வருகிறார். அப்போது புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், முடிவடைந்த கட்டுமானங்களை திறந்து வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார். அதன்பின் கரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். 

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் மின்வாரிய அலுவலகம், கம்பங்கள் சேதம் ஏற்பட்டது. அவற்றை சீரமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. கேங்மேன் பணியிடங்களை பொறுத்தவரை, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வழக்கு நிறைவுக்கு பின் பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக விரைவில் மேலாண் இயக்குனர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது‌. அதன்பின் எனது தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்று உரிய தீர்வு காணப்படும் என்றார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →