விழுப்புரம்: கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கலையூர் கூட்ரோடு, கடம்பூர் கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர், கடந்த 12 ஆம் தேதி கரோனா தொற்று அறிகுறியோடு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 335 வது வார்டில், உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
புதன்கிழமை அதிகாலை அந்த வார்டில் உள்ள ஜன்னலில், தனது லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.