கோவை கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சை மறுப்பு -எம்.பி. புகார்
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக கோவை எம்.பி. பிஆர் நடராஜன் புகார் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார்.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக கோவை எம்.பி. பிஆர் நடராஜன் புகார் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சிபிஐ(எம்) மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாவட்ட ஆட்சியர் கே.ராஜமானிக்கு எழுதிய கடிதத்தில், சில தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களைப் பிரசவத்திற்கு அனுமதிக்கவில்லை என புகார்கள் வந்துள்ளது.
மருத்துவமனை சார்பில் தெரிவிக்கும் காரணம் என்னவென்றால், இந்தப் பெண்கள் ஆரம்பத்தில் இருந்தே இங்கு சிகிச்சை பெறவில்லை. இந்த நிலையில் நாங்கள் அவர்களின் உடல் நிலை அறியாமல் கையாண்டால் வரும் பிரச்சனைகளை மருத்துவமனை எதிர்கொள்ள தயாராக இல்லை என்கிறார்கள்.
அதையும் மீறி கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சையளிக்க அழுத்தம் கொடுத்தால், படுக்கைகள் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறுகிறார்கள்.
இதற்கு, தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய வசதிகள் இல்லாததே உண்மையான காரணம்.
இந்தப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பிரச்சனைகள தீர்க்க வேண்டும். மேலும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா வார்டுகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.