தற்போதைய செய்திகள்

புரெவி புயல்: தமிழக முதல்வருடன் மோடி பேச்சு

DIN

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்று இரவு இலங்கையில் கரையைக் கடந்து டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை குமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்க உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தமிழக முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

இதற்குபின், மோடி வெளியிட்ட சுட்டுரை செய்தியில்,

“புரெவி புயலை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழகம் மற்றும் கேரள முதல்வர்களுடன் கேட்டறிந்தேன்.

இரு மாநிலங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். மேலும் புயல் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளில் இருக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT